டெல்லி

ரியானா மாநில சுயேச்சை எம் எல் ஏக்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்க உள்ளனர்.

பெரும்பாலான கருத்துக் அரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. தோல்வியை தழுவும் என்றும், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றும் கணிப்புகள் தெரிவித்தன. ஆயினும் அந்த கணிப்புகளை பொய்யாக்கி பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

மொத்தம் 90 தொகுதிகள் கொண்ட அரியானாவில் ஆட்சியமைக்க 46 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பா.ஜ.க. 48 தொகுதிகளில் வெற்றி பெற்று இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக பா.ஜ.க. ஆட்சியமைக்க உள்ளது. முதல்வராக நயாப் சிங் சைனி நீடிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆளும் பா.ஜ.க.வுக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தேவேந்தர் கத்யான், ராஜேஷ் ஜூன் ஆகியோர் இன்று பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்தனர். அரியானா மாநில பா.ஜ.க. பொறுப்பாளர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை அவரது இல்லத்தில் சந்தித்து, பா.ஜ.க.ஆட்சிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

இதைப் போல் கனார் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.வான கத்யான், பா.ஜ.க.வில் இருந்து அதிருப்தி காரணமாக பிரிந்து சென்று கனார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். ராஜேஷ் ஜூன் பா.ஜ.க.வில் இருந்து பிரிந்து சென்று பகதூர்கர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆகியிருக்கிறார்.

தவிர பா.ஜ.க.வில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற நாட்டின் பணக்கார பெண்மணியான சாவித்ரி ஜிண்டாலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளிப்பார் என கூறப்படுகிறது. இன்று அவரும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசியுள்ளார்.