சென்னை: மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாள் தீபாவளி என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாளான தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘அதர்மம் என்றைக்கும் நிலைத்ததில்லை’ என்பதை உலகுக்கு உணர்த்தும் இந்த நன்னாளில் பரவுகிற புதிய வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும் என டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், மனம் இனிக்கும் மகிழ்ச்சித் திருநாளான தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். ஆணவமும், அலங்காரமும் அழிந்து, மகிழ்ச்சியும் நிம்மதியும் மக்களிடம் தழைத்திட வேண்டும் என்பதுதான் தீப ஒளி திருநாளின் அடிப்படை தத்துவமாகும் – அதர்மமம் என்றைக்கும் நிலைத்த தில்லை என்பதை உலகுக்கு உணர்த்தும் இந்த நன்னாளில், தீமைகள் அனைத்தும் விலகி, தர்மம் செழிக்க வேண்டும் – ஒவ்வொருவரின் வீடுகளிலும் ஆரோக்கியமும் அன்பும், மகிழ்ச்சியும் நிறைந்திட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தீபாவளியில் பரவுகிற புதிய வெளிச்சம் புதிய வெற்றிகளுக்கான பாதைகளை உருவாக்கட்டும் – கொரோனா பெருந்துயரில் இருந்து முழுமையாக மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கை விரைவில் நனவாகட்டும் – வலி தந்த இழப்புகள் மாறி, வலிமையையும் வளங்களையும் இத்திருநாள் கொண்டு வரட்டும் – அகத்திலும், புறத்திலும் இருள் அகன்று அனைவரும் ஆனந்தமாக வாழ்ந்திட தீபாவளி நாளில் வாழ்த்தி மகிழ்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.