மெக்கா:
வூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உலகில் அதிக அளவில் நடைபெறும் புனித பயணங்களில் ஒன்றாக கருதப்படுவது ஹஜ் பயணமாகும். இஸ்லாமியர்கள் கடமைகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் நிகழ்வு இது. இதுகுறித்து ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக இவ்வாண்டு வெளிநாட்டு ஹஜ் யாத்திரீகர்களுக்கு அனுமதி இல்லை எனினும் உள் நாட்டில் வசிக்கும் குறைந்த அளவிலான யாத்ரீகர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணங்கள் மூலமாக சவுதி அரேபியாவிற்கு ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் கிடைக்கிறது என்பதும், கடந்த ஆண்டு மட்டும் 2.5 மில்லியன் நபர்கள் சவுதி அரேபியாவிற்கு புனித பயணமாக வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.