புதுடெல்லி:

போயிங் விமானம் குறித்த சர்ச்சை இருந்தபோதிலும், கோடை விடுமுறையின்போது விமான பயணக் கட்டணம் 20% உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இது குறித்து யாத்ரா ஆன்லைன் நிறுவன தலைமை அதிகாரி சரத் தால் கூறும்போது, “விமானிகள் பற்றாக்குறை, நிதி நெருக்கடி மற்றும் போயிங் விமான சர்ச்சை ஆகியவற்றால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் 50% விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனினும், வரும் கோடைக் காலத்தில் அதிகம் பேர் குடும்பத்துடன் பயணம் செய்வார்கள்.

இதனால், உள்நாட்டு விமானப் பயணக் கட்டணம் 20% உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.