சென்னை: வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமைச் சூழலை உருவாக்குவது நம் வருங்கால தலைமுறைக்கு அத்தியாவசமானது என தலைமைச்செயலகத்தில் நடைபெற்று வரும்  ஆட்சியர்கள் வன அலுவலர்கள் மாநாட்டில்  முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10,11,12 ஆம் தேதிகளில் சென்னையில் 3 மாநாடு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த மாநாட்டில்  மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் பங்கேற்பார்கள் என்றும்இ மாவட்ட நிர்வாகம், சட்டம் – ஒழுங்கு, நிர்வாக பணிகள் குறித்து மூன்று நாட்கள் மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக  தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து 10ந்தேதி தலைமைச்செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் மாநாடு தொடங்கியது. மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மக்கள் தான் எஜமானர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது என்றும், மாநிலத்தில்  சட்டம் ஒழுங்கு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.

இதையடுத்து இன்று 3வது நாள் மாநாடு முதலமைச்சர் ஸ்டாலின்  தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு நடைபெற்று  நடைபெற்றது.

இதில் உரையாற்றிய முதல்வர், மாநிலத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்துவது, பசுமைச் சூழலை உருவாக்குவது இன்றைய மனித குலத்திற்கு மட்டுமல்ல, நம் வருங்கால தலைமுறைக்கும் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது என்பதை வலியுறுத்தினார்.