டெல்லி: டிஜிட்டல் மோசடிகள் தொடர்பாக பயன்படுத்தப்பட்டு வந்த   59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளை இந்திய அரசு முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் (I4C), டிஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்படும் 1,700 க்கும் மேற்பட்ட ஸ்கைப் ஐடிகள் மற்றும் 59,000 வாட்ஸ்அப் கணக்குகளை கண்டறிந்து முடக்கியுள்ளது என்று மக்களவையில் உறுப்பினரின்  அளிக்கப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சி அதிவிரைவில் வளர்ந்து வரும் நிலையில்,  அதைத்தொடர்ந்து,  சமீப காலமாக நாடு முழுவதும்  டிஜிட்டல் மோசடிகள் அரங்கேறி வருகிறது. இதைத்தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதுதொடர்பாக மக்களவையில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்க பதில் கூறிய உள்துறை அமைச்சகம்,  நாடு முழுவதும் ஜிட்டல் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் முடக்கி உள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை இணை மந்திரி பாண்டி சஞ்சய்குமார்  அளித்த பதிலில்,  டிஜிட்டல் கைது மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 1,700 ஸ்கைப் ஐ.டி.கள் மற்றும் 59 ஆயிரம் வாட்ஸ்-அப் கணக்குகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 9.94 லட்சத்திற்கும் அதிகமான புகார்களில் ரூ. 3,431 கோடி மீட்கப்பட்டுள்ளது. 6.69 லட்சத்திற்கும் அதிகமான சிம்கார்டுகள், 1.32 லட்சம் ஐ.எம்.இ.ஐ.கள் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.