இந்த நிலையில் புதுவை ஆளுனராக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வரலாற்றுப் பிழை செய்து விட்டார் என புதுவை முதல்வர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு இருப்பதாகவும், கடிதத்தில் நியமன உறுப்பினர்களை பாஜக என்று குறிப்பிட்டுள்ளார். நியமன உறுப்பினர்களை பாஜகவினர் என்று சபாநாயகர் இதுவரை அங்கீகரிக்கவில்லை. எனவே, ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது.
இதுபற்றி எனக்கு விளக்கம் தர ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். கட்சி மாறும் தடை சட்டத்திலுள்ள பிரிவொன்றில், நியமன எம்எல்ஏக்களாகி ஆறு மாதத்துக்குள் கட்சியின் பெயரை சேர்க்க உரிமை உண்டு. சேராவிட்டால் அவர் நியமன எம்எல்ஏதான். இதுபற்றி சபாநாயகரிடம் பேசுவேன் வரும் 21ம் தேதி காங்கிரஸ்-திமுக கூட்டணி எம்எல்ஏக்கள் ஆலோசனைக்கூட்டம் நடக்கிறது. அதில் சட்டப்பேரவையில் கூட்டத்தில் எங்கள் நிலைப்பாடு பற்றி முடிவு எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.