திருவனந்தபுரம்:
கேரளாவை உலுக்கிய தங்கக்கடத்தல் வழக்கில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் சந்தீப் நாயர் என்பது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான வழக்கில், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் பெங்களூரில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் தமிழகத்தில் சேலம் வழியாக கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டு கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் இருவருக்கும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் ஆணையிட்டது. இதனிடையே மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படிமுடிவு வரும் என என்ஐஏ எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் முடிவு வெளியாக தாமதமானது. இந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது சோதனை முடிவில் தெரிய வந்தது.
இதையடுத்து, என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீது விசாரணை நடத்திய சிறப்பு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவரையும் நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். அதன்படி இன்று மதியம் நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பின்னர் என்ஐஏ சார்பில் சிறப்பு வழக்கறிஞராக வாதிட்ட அர்ஜுன் என்பவர், இருவருமே தீவிரவாத செயல்களுக்காக தங்கம் கடத்தி இருப்பது தெரியவந்ததாக முக்கியமான கருத்தை குறிப்பிட்டு வாதாடினார்.

தங்கம் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர் சந்தீப் நாயர் என்றும், அவர்கள் கடந்த ஓராண்டாக தொடர்ந்து தங்கம் கடத்தல் செய்து வருவதாகவும் கூறினார். மேலும், ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை 13ஆம் தேதி 9 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாகவும், தங்கம் கடத்தலில் 3 முறை பெரிந்தல் மண்ணா பகுதியை சேர்ந்த அப்துல் ஹமீது என்பவர் ஈடுபட்டார். அவரை தேடி வருவதாகவும் கூறியவர், சந்திப் நாயர், ஸ்வப்னாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க 10 நாள் அனுமதி கோரினார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ண குமார் இருவரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக் கஅனுமதி வழங்கினார். அதன்படி, வரும் 20 ஆம் தேதி வரை காவலில் வைத்து தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க அனுமதி வழங்கி வழங்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel