சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நேற்று ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 7025க்கு விற்பனையானது.

இன்று கிராம் ஒன்றுக்கு ரூ. 70 அதிகரித்து ஒரு கிராம் ரூ. 7095க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் ஆபரண தங்கம் 56,760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.