சென்னை
நாளை முதல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.’
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்.
நாளை முதல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாளை முதல் சீமான் தீவிர பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். சீமானுடைய முதற்கட்ட தேர்தல் பிரசார பயணம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நாளை 28 ஆம் தேதி- கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை,
29 ஆம் தேதி – நெல்லை, தென்காசி, விருதுநகர்,
30 அம் தேதி – தூத்துக்குடி, ராமநாதபுரம்,
31 ஆம் தேதி – சிவகங்கை, மதுரை,
ஏப்ரல் 1 ஆம் தேதி தேனி, திண்டுக்கல்,
2 ஆம் தேதி- கரூர், திருச்சி.
சீமான் வாகனங்கள் மூலமாகவும், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பேச உள்ளார்.