திருப்பதி

நாளை முதல் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி திருமலையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

நாடெங்கும் கொரோனா பரவல் மீண்டும் கடுமையாக அதிகரித்து வருகிறது.  இது கொரோனாவின் இரண்டாம் அலை என அஞ்சப்படுகிறது.  இந்த கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

மக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது.   நாளை முதல் திருப்பதி திருமலையில் தேப்ப உற்சவம் தொடங்க உள்ளது.  இந்த கல கட்டத்தில் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருக்கும்.  எனவே கொரோனா பரவ அதிக அளவில் வாய்ப்புள்ளது.

இதையொட்டி திருப்பதியில் நாளை முதல் வரும் 28 ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.  திருப்பதி திருமலையில் கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக தற்போது கடும் கட்டுப்பாடு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.