சென்னை: நாடு முழுவதும் மருத்துவ படிப்புகான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், எப்போதும்போல இந்த ஆண்டும் மாபெரும் குளறுபடி நடைபெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது மோடி அரசின் மோசடித்தனம் என்றும், தேசிய தேர்வு முகமையின் கண்ணியமற்ற செயல் என்றும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.  மோடிஅரசின் இதுபோன்ற செயல் மாநிலத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு லாக்டவுன்  காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு  கடந்த செப்டம்பர் மாதம் 13ம் தேதி டைபெற்றது. நீட்  தேர்வுக்கு நாடு முழுவதும்   15.97 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 85-90 சதவீதம் பேர் மட்டுமே தேர்வுகள் எழுதியதாக தேசிய தேர்வு முகமை கூறியது. இதையடுத்து, தேர்வ எழுதாத மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி, கடந்த 14ந்தேதி (அக்டோபர்) மாணவர்கள் தேர்வு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, நீட தேர்வு முடிவுகள் நேற்று தினம் மாலை வெளியானது.
இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகார பூர்வமாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியாகிய இணையதளத்தில் ஒரு சில குளறுபடிகள் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் தேர்வு முடிவுகளை பார்த்ததில் மொத்தம் தேர்வு எழுதியவர்கள், தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் மற்றும் எண்ணிக்கையில் ஒரு பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மத்தியஅரசு திட்டமிட்டு தமிழகம் உள்பட சில மாநிலங்களை வஞ்சித்து வருவது அம்பலமாகி உள்ளது. நேற்று வெளியான தேர்வு முடிவில் ஏராளமான குழப்பங்கள் ஏற்பட்டுள்ள தெரிய வந்துள்ளது.
திரிபுரா மாநிலத்தில், மொத்தம் 3,536 பேர் தேர்வு எழுதிய நிலையில், தேர்ச்சி பெற்றவர்களோ 88,889 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047பேர் தேர்வு எழுதிய நிலையில் 37,307பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் 50,392பேர் தேர்வெழுதிய நிலையில்,  1,738 பேரே தேர்ச்சி பெற்றுள்ள தாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  ஆனால்  தேர்ச்சி விகிதம் 49.15%என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 1.56 லட்சம் பேர் தேர்வெழுதியத்தில், 7,323பேர் தேர்ச்சி பெற்ற நிலையில் தேர்ச்சி விகிதம்  60.79என தேர்ச்சி விகிதம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை வெளியிட் தேசிய தேர்வு முகமையின் செயல் கடுமையான விமசனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. மோடி அரசின் மோசடிக்கு, தேசிய தேர்வு முகமை துணை போயுள்ளதாக, மாணவர்கள், பெற்றோர்கள் கொந்தளித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு உள்பட மத்தியஅரசு நடத்தும் பல்வேறு தேர்வுகளில் தமிழகம் உள்பட சில மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவது, திட்டமிட்டே அரங்கேற்றப்பட்டு வருகிறது. அதுபோல, நீட் தேர்வுல் இந்த ஆண்டும் குளறுபடி நடைபெற்றுள்ளது.

இது சம்பந்தமாக தேசிய தேர்வு முகமை, மத்திய கல்வி துறை அமைச்சகம் விளக்கம் அளிக்குமா என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.