பாரிஸ்: கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக, வரும் 17ம் தேதி முதல் 4 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் 200க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. ஐரோப்பிய நாடான பிரான்சில் தற்போது கொரோனா 2வது அலை பரவி வருகிறது.
அங்கு இதுவரை 7.79 லட்சத்துக்கும் அதிகமான பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான், 4 வாரங்களுக்கு நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அக்டோபர் 17ம் தேதி துவங்கும் இந்த முழு ஊரடங்கு, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, 4 வாரங்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.