பிரான்ஸில் முக்கிய நகரங்களை இணைக்கும் ரயில் வழித்தடத்தில் தீ வைப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த தீ வைப்பு சம்பவத்திற்கு நாசவேலை காரணம் என்று கூறப்படுகிறது.

இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணிக்கு ஒலிம்பிக் போட்டி துவக்க நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில் நாட்டின் முக்கிய ரயில் வழித்தடத்தில் ஏற்பட்ட இந்த தீ வைப்பு சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் 8 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர்.
https://x.com/BabakTaghvaee1/status/1816758177968336994
இந்த சம்பவத்தால் பிரான்ஸ் மற்றும் அதன் அண்டை நாடுகளுடனான ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டி துவங்க உள்ள நேரத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் போக்குவரத்து முழுவதும் சீராக ஓரிரு நாட்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.