சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். இன்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில், முன்னாள் முதல்வர் ஒருவர் அரசியல் அனாதையாகி இருப்பது தற்போதுதான். அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அதிகார மோகத்தால், அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து ஆவணங்களை எடுத்துச்சென்ற விவகாரம், அதிமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரை அதிமுகவினர் அடியோடு புறக்கணித்தனர். அவரிடம் இருந்து வந்த ஆதரவாளர்களும், திமுக, அதிமுக, த வெக என மற்ற கட்சிகளுக்கு தாவினர். இதனால் விரக்தி அடைந்த ஓபிஎஸ் தனது ஆதரவாளர்கள் மூலம் அதிமுகவில் இணைக்க முயற்சித்தார். ஆனால், எடப்பாடி அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. அதுபோல பாஜக தலைமையும் அவரை கை கழுவியது. இதனால், செய்வதறியாது இருந்து வருகிறார்.
இதையடுத்து, தனது குடும்பத்தினர், மகன்களின் எதிர்காலத்தை கவனத்தில்கொண்டு, திமுக தலைவர் ஸ்டாலினை சில முறை சந்தித்து அரசியல் அடைக்கலம் தேடி வந்தார். அவரது முயற்சி பலித்துள்ளது. அவருக்கு அடைக்கலம் கொடுக்க திமுக முன்வந்துள்ளது.
இதனால் ஓபிஎஸ் திமுகவில் இணைவார் தகவல் பரவியது. அதற்கு ஏற்றார்போல, திமுகவை வானளாவ புகழ்ந்து தள்ளினார். அவரது ஆதரவு எம்எல்ஏ அய்யப்பனும் தமிழக சட்டமன்றத்திலேயே திமுக ஆட்சிக்கு ஆதரவான கருத்துக்களையே தெரிவித்து புகழ்ந்தார். இதனால், அவருக்கு திமுக தலைமையுடம் இருந்து கிரின் சிக்னல் கிடைத்துவிட்டது என்பது தெரிய வந்தது.
இந்த நிலையில், இன்று அவர் தனது ஆதரவாளர்கள் மற்றும் மகன்களுன் சென்று திமுகவில் இணைய உள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ளவுள்ளார்.
[youtube-feed feed=1]