புதுடெல்லி:
கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 2,000 நோட்டுக்கள் அச்சிடப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் அளித்த விளக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 2,000 நோட்டுக்கள் அச்சிடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு அளித்துள்ள எழுத்துப்புர்வமான விளக்கத்தில், நாட்டில், 2,000 ரூபாய் நோட்டுக்களின் பயன்பாடு படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், 2019-20ம் நிதியாண்டில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் எதுவும் அச்சிடப்படவில்லை எனவும், கடந்த சில ஆண்டுகளாக 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.