சென்னை

ன்று மற்றும் 23 ஆம் தேதி மதியம்  12 மணி முதல் 2 மணிவரை எச்டிஎஃப்சி வங்கியின் யுபிஐ சேவை செயல்படாது என அரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில வங்கி பணிகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு இருக்கிறது.  முன்பு ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் வங்கிக்கு சென்று நிறைய படிவங்களை பூர்த்தி செய்து கால் கடுக்க காத்திருந்து பணம் அனுப்ப வேண்டும். அவருக்கு பணம் சென்று சேரவும் குறிப்பிட்ட மணி நேரம் ஆகும்.

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சில நிமிடங்களில் பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். அதிலும் குறிப்பாக டிஜிட்டல் முறையில் இந்தியாவில் உடனுக்குடன் பணத்தை அனுப்ப யுபிஐ பேமென்ட் வசதி உள்ளது.

வணிகர்கள் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் என பலரும் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். தவிர கூகுள் ப்ளே, போன் பே, அமேசான், பேடிஎம் உள்ளிட்ட பல்வேறு செயல்கள் இந்தியாவில் யுபிஐ பரிவர்த்தனையை மேற்கொள்கின்றன. இதன் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 

எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

”தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக யுபிஐ சேவை இந்த மாதத்தில் இரண்டு நாட்கள் செயல்படாது என்பட்கால் யுபிஐ மற்றும் பிற பரிவர்த்தனைகள் செயல்படாது என கூறியுள்ளது. நவம்பர் 5ஆம் தேத காலை 12 மணி முதல் 2 மணி வரை 2 மணி நேரத்திற்கும், நவம்பர் 23ஆம் தேதி காலை 12 மணி முதல் 3 மணி வரை மூன்று மணி நேரமும் யுபிஐ சேவை செயல்படாத

எச்டிஎப்சி வங்கியின் சேவிங்ஸ் மற்றும் கரண்ட் அக்கவுண்ட் கணக்குகளில் யுபிஐ பரிவர்த்தனை, ரூபே கிரிடிட் கார்டு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. எச்டிஎப்சி வங்கியின் மொபைல் பேங்கிங், ஜி பே, வாட்ஸ் ஆப் பேபயனர்கள் இதனை பயன்படுத்த முடியாது. மேலும் எச்டிஎப்சி வங்கி மூலம் வணிகர்களும் இந்த நேரத்தில் யுபிஐ பலிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது. அதே நேரத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் யுபிஐ சேவைகள் உடனடியாக கிடைக்கும் எனவும், அதற்கேற்ற முன்னேற்பாடுகளை பொதுமக்களும் வணிகர்களும் வாடிக்கையாளர்களும் மேற்கொள்ள வேண்டும்

எனக் கூறப்பட்டுள்ளது.