மும்பை

பிரபல இந்தி மற்றும் மலையாளத் திரைப்பட இயக்குநர் சங்கீத் சிவன் நேற்று மரணம் அடைந்தார்.

உடல் நலக் குறைவு காரணமாக பிரபல திரைப்பட இயக்குனர் சங்கீத் சிவன் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி சங்கீத் சிவன் (61) காலமானார். இயக்குனர் சங்கீத் சிவன், பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் சகோதரர் ஆவார்.

மலையாளம் மற்றும் இந்தியில் சங்கீத் சிவன் பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்  கடந்த. 1992 ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான மலையாளத் திரைப்படமான ‘யோதா’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதன் மூலம் சங்கீத் சிவன் பிரபலமானார்.

சங்கீத் சிவன் பாலிவுட்டில் இயக்கிய முதல் படமான ‘சோர்’ படத்தில் சன்னி தியோல் கதாநாயகனாக நடித்திருந்தார். தவிர இவர், ‘கியா கூல் ஹை ஹம்’ , ‘யாம்லா பக்லா தீவானா 2’ போன்ற இந்தி படங்களையும் இயக்கியுள்ளார்.