சென்னை: எம்பிபிஎஸ் முதலாண்டு மாணவர்கள் 20ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என்று மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு, இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், பல கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி 10 மற்றும் 12ம் வகுப்புகள் நாளை முதல் தொடங்குகின்றன.
இந்நிலையில் எம்பிபிஎஸ் முதலாண்டு மாணவர்கள் 20ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என்று மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு, இயக்குனரகம் ஆணையிட்டு உள்ளது.
இது குறித்து அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கு, மருத்துவ கல்வி இயக்குநரகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: அரசு, தனியார் மருத்துவ கல்லூரியில் முதலாண்டு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பு வகுப்புகள், வரும் 20ம் தேதி முதல் துவங்க உள்ளன.
அனைத்து மாணவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே கல்லூரிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். ஆள்மாறாட்டத்தை தவிர்க்கும் வகையில் நீட் தேர்வு போன்ற சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். பிப்ரவரி 2ம் தேதியில் இருந்து வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.