45 வருடத்துக்கும் மேல் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் சாதனை படைத்துவரும் இளையராஜா, கொஞ்ச காலம் ஏவிஎம் ஸ்டுடியோவில் இசையமைத்து வந்தார்.
பின்னர் பிரசாத் ஸ்டுடியோவுக்கு தன் இசைக்கூடத்தை இடம் மாற்றிக் கொண்டார். பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட, இளையராஜாவின் இசைக்கூடத்தை இடம் மாற்றிக் கொள்ளச் சொல்லிவிட்டது .
இந்நிலையில், ‘தமிழரசன்’ படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை, தன்னுடைய வீட்டிலேயே மேற்கொண்டுள்ளார் இளையராஜா.
இத்தனை வருட சினிமா வாழ்க்கையில், தன்னுடைய வீட்டில் ஒரு படத்துக்கு பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை இளையராஜா செய்தது இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.