புனே: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே, புனேயில் தொடங்கியுள்ள முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்துள்ளது.

அதன்படி, இந்திய அணியில் ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் ஆட்டத்தை நிதானமாக துவங்கியுள்ளனர்.

1 ஓவர் கடந்துவிட்ட நிலையில், இந்திய அணி 2 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. இங்கிலாந்தின் பந்துவீச்சை மார்க்வுட் தொடங்கி வைத்தார்.

புனேயிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில், பகலிரவு போட்டியாக இது தொடங்கியுள்ளது.