ஸ்ரீநகர்

தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து உரிமையை மீட்பதே தங்களுக்கு முன்னுரிமை என  உறுதிபடத் தெரிவித்துள்ளார்

அண்மையில் ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றதில், தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பா.ஜ.க. 29 இடங்களில் வெற்றி பெற்றது.

முதல்வர் பதவிக்கு தேசிய மாநாடு கட்சியின் துணை தலைவர் உமர் அப்துல்லாவை தேர்வு செய்ய அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ளனர்., 6 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆதரவு கிடைத்தவுடன், கவர்னரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரப்படும் என தேசிய மாநாடு கட்சி தெரிவித்துள்ளது.

தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா

“ஜம்மு-காஷ்மீரில் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை தீர்க்க முன்னுரிமை வழங்குவோம். இங்கு ஏராளமான பிரச்சினைகள் நிலவி வருகின்றன. சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் அமல்படுத்துவதற்கு நீண்ட காலம் ஆகலாம்,

ஆனால் ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்க வேண்டும் என்பதே எங்கள் முன்னுரிமையாக இருக்கும். ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் கிரீடம் ஆகும். மத்திய அரசு எங்களுக்கு அனைத்து வகையிலும் ஆதரவு வழங்கும் என்று நம்பிகிறோம்.”

என்று தெரிவித்துள்ளார்.