ஜெய்ப்பூர்: மத்திய அரசு கொண்டு வந்த விவசாயச் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அந்த சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசின் வேளாண் துறை தொடர்பான வர்த்தக மசோதா உள்ளிட்ட 3 காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், பாராளுமன்ற இருஅவைகளிலும் மோடி அரசு தனது ஆதரவு கட்சிகளுடன் நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுபோல காங்கிரஸ் கட்சியும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன , இந்த சட்டம் விவசாயிகளுக்கு எதிரானது என்பதால் திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கப்படுட வருகின்றன.
இந்த நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக மாநில திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என்றம், அதறக்க சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலோட் திட்டமிட்டு இருபபதாகவும், மத்திய அரசின் சட்டங்களை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்று முதல்வர் அசோக் கெலோட் தெரிவித்துள்ளார்.
ஏற்கனபே பஞ்சாப் மாநில சட்டமன்றத்தில், மத்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருத்தச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக ராஜஸ்தான் மாநிலத்திலும் திருத்தச் சட்டம் கொண்டு வருவதற்கான முயற்சியில் மாநில அரசு தீவிரமாகி இறங்கி உள்ளது.