டெல்லி: “எங்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற உங்களால் முடியாவிட்டால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்”  என வாட்ஸ்அப் கொள்கை தொடர்பாக மெட்டா நிறுவனத்திற்கு தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாட்ஸ்அப்பின் தனியுரிமைக் கொள்கை குறித்து நீதிமன்றம் கூர்மையான கருத்துக்களைத் தெரிவித்தது, அதில் நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மற்றும் கல்வியறிவற்ற மக்களால் அதைப் புரிந்துகொள்ள முடியுமா என்றும் கேள்வி எழுப்பியது.

இந்தியாவில் பல கோடி பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள்.  ஆனால் மக்களின் தகவல்களை மெட்டாபிளாட்பார்ம் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் தனியுரிமை கொள்கையை மீறி மக்களின் தகவல்களை மற்ற நிறுவனங்களுக்கு விற்பதாக புகார் எழுந்ததன் அடிப்படையில் இந்திய போட்டி ஆணையம் அந்நிறுவனங்களுக்கு 213.14 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இதை எதிர்த்து வாட்ஸப் நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விளம்பர நோக்கங்களுக்காகப் பயனர் தரவுகளைப் பகிர்வது தொடர்பாக போட்டி ஆணையம் ஒரு மேல்முறையீட்டையும் செய்திருந்தது. இதில், நிறுவனத்தால் ‘அதிகார துஷ்பிரயோகம்’ செய்யப்படவில்லை என்று தீர்ப்பளித்த பிறகு, தீர்ப்பாயம் அதற்கு அனுமதி அளித்திருந்தது.

இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வநதது. அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் இந்திய மக்களின் தரவு விற்கப்படுவதோடு, வணிகரீதியாகவும் சுரண்டப்படுகிறது என வாதங்களை முன் வைத்தார். அதைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்யா காந்த் மெட்ராஸ் பிளாட்பார்ம், வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு கடும் எச்சரிக்கை கொடுத்தார்.

“எங்கள் அரசியலமைப்பைப் பின்பற்ற முடியாவிட்டால், இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். குடிமக்களின் தனியுரிமை சமரசம் செய்யப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று பதிலளித்தார்.

நாட்டின் கோடிக்கணக்கான ஏழை மற்றும் கல்வியறிவற்ற மக்களால் இதை புரிந்துகொள்ள முடியுமா என்று கேட்டது. “…ஒரு ஏழைப் பெண் அல்லது சாலையோர வியாபாரி, அல்லது தமிழ் மட்டும் பேசும் ஒருவர்… அவர்களால் புரிந்துகொள்ள முடியுமா?”

“சில நேரங்களில் உங்கள் கொள்கைகளைப் புரிந்துகொள்வதில் எங்களுக்கே சிரமம் ஏற்படுகிறது…” ‘விலகிக்கொள்ளும்’ ஒரு விதிமுறை பற்றித் தெரிவிக்கப்பட்ட பிறகு, மெட்டா மற்றும் வாட்ஸ்அப்பை நீதிமன்றம் கடுமையாகச் சாடியது, “… அப்படியானால் கிராமப்புற பீகாரில் வசிக்கும் மக்கள் இதை எப்படிப் புரிந்துகொள்வார்கள்? இது தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்கான ஒரு வழி. நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம்.”

பின்னர் தலைமை நீதிபதி தனது சொந்த அனுபவத்தை ஒரு அளவுகோலாக முன்வைத்தார். “வாட்ஸ்அப்பில் ஒரு மருத்துவருக்கு ‘உங்களுக்கு உடல்நிலை சரியில்லை’ என்று ஒரு செய்தி அனுப்பப்பட்டால்… மற்றும் அந்த மருத்துவர் சில மருந்துச் சீட்டுகளை அனுப்பினால், உடனடியாக நீங்கள் விளம்பரங்களைப் பார்க்கத் தொடங்குவீர்கள்…”

மெட்டா மற்றும் வாட்ஸ்அப் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி மற்றும் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆகியோர், அனைத்து செய்திகளும் ‘எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட்’ செய்யப்பட்டுள்ளன, அதாவது நிறுவனங்களால் கூட உள்ளடக்கத்தைப் பார்க்க முடியாது என்று கூறி வாதிட்டனர்.

வழக்கு விவரம்

நவம்பர் 2024-ல், 2021-ஆம் ஆண்டின் தனியுரிமைப் புதுப்பிப்பு குறித்துத் தீர்ப்பளித்த இந்தியப் போட்டி ஆணையம் (CCI), சந்தையில் தனது ஆதிக்க நிலையைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் தனது பயனர்களைப் புதிய கொள்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்துகிறது என்று கூறியது.

பிற மெட்டா தளங்களுடன் தரவைப் பகிர்வதற்கு அனுமதித்தால் மட்டுமே செய்தியிடல் சேவைகளைத் தொடர்ந்து அணுக முடியும் என்று வாட்ஸ்அப் பயனர்களிடம் கூறியதை இந்தியப்போட்டி ஆணையம் கடுமையாகக் கண்டித்தது.

இதன் விளைவாக, 213 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அந்தத் தொகை செலுத்தப்பட்டுவிட்டதாக ரோஹத்கியும் சிபலும் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஜனவரி 2025-ல் மெட்டாவும் வாட்ஸ்அப்பும் அந்த உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தன. நவம்பர் 2025-ல், சட்டத் தீர்ப்பாயம் வாட்ஸ்அப் தரவைப் பகிர்வதற்கு விதிக்கப்பட்ட ஐந்து ஆண்டு தடையை ரத்து செய்தது, இருப்பினும் அபராதத்தை உறுதி செய்தது.

தரவு பகிர்வு என்கிற பெயரில் இந்திய நாட்டு மக்களின் தனியுரிமையுடன் நீங்கள் விளையாடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். தரவின் ஒரு வார்த்தையை கூட நீங்கள் பகிர நாங்கள் அனுமதிக்க முடியாது.

இந்த நாட்டின் அரசியல் அமைப்பு கோட்பாடுகளை நீங்கள் கேலியாக பார்க்கிறீர்கள். நீங்கள் குடிமக்களின் தனி உரிமையை மீற முடியாது. இது தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்கு ஒரு நாகரீகமான வழி. அதைத்தான் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள். ஆனால் அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நீங்கள் உறுதிமொழி கொடுக்காவிட்டால் நாங்கள் முக்கிய உத்தரவை பிறப்பிக்க வேண்டியிருக்கும்.

எங்கள் அரசியல் அமைப்பு சட்டத்தை உங்களால் பின்பற்ற முடியாது என்றால் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள். எந்த ஒரு குடிமகனின் தனி உரிமையுடனும் நீங்கள் சமரசம் செய்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது.. உங்களைப் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் தனியுரிமை விதிமுறைகள் மக்களுக்கு புரியாத வகையில் மிகவும் தந்திரமாக வடிவமைக்கப்படுகிறது.

இந்த வழக்கில் வருகிற 9ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என அவர்கள் கூறினார்கள். மேலும் மெட்டா மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களை இது தொடர்பாக பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

[youtube-feed feed=1]