கடலூர்: கடலூர் மாவட்டத்தில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையின் சாவியை அதிகாரிகள் தொலைத்து விட்டதால் வாக்கு எண்ணிக்கை மையத்தை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டு. கட்சியினரும் குவிந்தனர். இதையடுத்து, அந்த அறையியூன் பூட்டு உடைக்கப்பட்டு வாக்குப் பெட்டிகள் எடுக்கப்பட்டன. இதனால், அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் பணி தாமதமானது.

கடலூர் மாநகராட்சியில் ஒரு தனியார் பள்ளியில்ரு தனியார் பள்ளியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்போது பதிவான வாக்குகள் கொண்ட  மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த அறையின் பூட்டை, 19ந்தேதி அன்று காவல்துறையினிர் முன்னணிலையில், அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆனால், இன்று வாக்கு எண்ணிக்கைக்காக வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த அறையின் கதவுகளை திறக்க முற்பட்டபோது, சாவி இல்லாதது தெரிய வந்தது.

அறையின் பூட்டுக்கு சீல் வைத்தபோது, சாவியை வாங்கிய அதிகாரி யார் என்பது குறித்து சலசலப்பு ஏற்பட்டது. தேர்தல் அலுவலர்கள், முகவர்கள், வேட்பாளர்கள் சரியான நேரத்தில் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த நிலையில், ஒரு சாவியை வைத்து அறையை திறக்க முயன்றபோது அந்த முயற்சி தோல்வியடைந்தது. பின்னர் சாவி தொலைந்து விட்டதாக கூறி, அதிகாரிகள், காவல்துறையினர்,  வேட்பாளர்கள்,முகவர்கள் முன்னிலையில் அறையின் பூட்டு உடைக்கப்பட்டு தற்போது வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கியுள்ளன.

அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான நடவடிக்கையால்,  வாக்கு எண்ணிக்கை தாமதமாகியது. இதனால் அங்கு சுமாலை அரை மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பு நிலவியது.