சென்னை

பொங்கலை முன்னிட்டு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் நாளை தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள் பொங்கல் விடுமுறையை கொண்டாட தயாராகி வரும் சூழலில், கேந்திரிய வித்யாலயா பள்ளி தேர்வுகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தன.

சென்னை, மதுரை, திருச்சி பள்ளிகளில் பொங்கல் விடுமுறை நாட்களில் ஜனவரி 13, 16, 17, 18 தேதிகளில் 6ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

மதுரை மக்களவை தொகுதி எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில்,

“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பொங்கல் விழா நாட்களில் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு திருவிழா கால விடுமுறையை கொண்டாட முடியாத உளவியல் தாக்குதலை ஏற்படுத்தும். மேலும் தமிழ் பண்பாட்டின் மீதான ஒவ்வாமையை வெளிப்படுத்தும் செயலாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த தேர்வுகள் அனைத்தையும் மறு தேதிக்கு மாற்ற வேண்டும்”

என்று பதிவிட்டிருந்தார்.

இதையொட்டி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதற்கு மதுரை மக்களவை தொகுதி எம் பி சு வெங்கடேசன் தனது எக்ஸ் வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து ப்திவிட்டுள்ளார்.