சென்னை

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவுடன் பாஜக மறைமுக கூட்டனியில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்,,

“பாஜக உடன் இப்போதும் கூட்டணி இல்லை, எப்போதும் கூட்டணி இல்லை என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடில் எந்த மாற்றமும் இல்லை. அ.தி.மு.க.வின் முடிவில் 2026 மட்டுமல்ல, எப்போதும் மாற்றமில்லை. பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று கட்சி சார்பில் முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் திரித்து வெளியிடப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்துடன் வரும் கட்சிகளுடன் பேசி கூட்டணி அமைப்போம் என்றே எடப்பாடி பழனிசாமி கூறினார். பா.ஜ.க.வுடன் தி.மு.க.தான் மறைமுக கூட்டணியில் உள்ளது. பா.ஜ.க.வுடன் மறைமுக ஒப்பந்தத்துடன் தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

திருச்சி சிவா நடத்திய பார்ட்டி நிகழ்ச்சியில் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். அமைச்சராக இல்லாதபோதே பிரதமரை உதயநிதி எப்படி சந்திக்க முடிந்தது. கருணாநிதி நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய அமைசசரை எவ்வாறு அழைத்தனர்”

என்று தெரிவித்துள்ளார்.