சென்னை:

சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் சிட்கோவுக்கு சொந்தமான இடத்தில் கட்டிட அனுமதி பெறாமல் வீடு கட்டியுள்ளதாகவும், , அவரது வீட்டை இடிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், தமிழக அரசுக்கு குறிப்பு அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த  2006 முதல் 2011ம் ஆண்டு வரை  சென்னை மாநகர மேயராக இருந்தவர் திமுகவை சேர்ந்த மா.சுப்பிரமணியன். தற்போது சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருக்கிறார்.

இவர் சென்னை ஈக்காடுதாங்கல் பகுதியில் சிட்கோ இடத்தை ஆக்கிரமித்ததுடன், கட்டிட அனுமதி இன்றி 2 அடுக்கு மாடி வீடு கட்டியிருப்பதாக புகார்  எழுந்தது.

கடந்த 2016ம் ஆண்டு, இதுகுறித்து விசாரிக்க விஜிலன்ஸ் அமைப்புக்கு கொடுக்கப்பட்ட தகவலை தொடர்ந்து, மா.சு.வின் இரண்டு அடுக்கு மாடி வீட்டுக்கு  மாநகராட்சி கட்டிட அனுமதியும் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான புகாரின் பேரில் ஈக்காட்டு தாங்கல் லேபர் காலனியில் உள்ள மா.சுப்பிரமணியன் வீட்டை இடிக்க உத்தரவிட, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாநில அரசுக்கு குறிப்பு அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது.

மா.சு.வீடு விவரம்:

விசாரணையில், மா.சுப்பிரமணியன் தற்போது கட்டியுள்ள வீடானது, 1959 மற்றும் 1966ம் ஆண்டுகளில் கமலநாதன், எஸ்.கே.கண்ணன் ஆகியோருக்கு தொழிலாளர் ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்பட்டது என்றும், இந்த இடம் சிட்கோவுக்கு சொந்தமானது என்றும் கூறப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டு இதற்கான சிட்டாவை, எஸ்.கே.கண்ணன்  தனது ஒரே மகள் காஞ்சனா (மா.சு.வின் மனைவி) பெயருக்கு மாற்றம் செய்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக அப்போதைய  ரேஷன் கார்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், எஸ்.கே.கண்ணன் (மா.சு.வின் மாமனார்) பெயர் 2005ம் ஆண்டு புதுப்பிக்கப்ப்டட ரேஷன் கார்டில் இல்லை என்றும், அதே வேளையில், கடந்த  2015ம் ஆண்டு இறந்து போன எஸ்.கே.கண்ணன்,  எற்கனவே சமர்ப்பித்துள்ள ஆவனங்களில், தனக்கு 6 குழந்தைகள் இருந்தாக குறிப்பிட்டுள்ளதாகவும், இவர்களில் காஞ்சனா (மா.சு.வின் மனைவி)  என்ற பெயர் இல்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும், கண்ணன் கடிதத்தை அடிப்படையாகக் கொண்டே, மேயர், சுப்பிரமணியன் வீட்டுக்கு வரி மதிப்பீடு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த வீடு கட்ட கட்டிட ஒப்புதல் பெறவில்லை என்றும், ஆனால், 1990 களில் இது அவசியம் என வலியுறுத்தப்பட வில்லை என்பதால் ஒப்புதல் பெறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

மா.சு.வீட்டு குறித்து, 2014ம் ஆண்டு மேயராக இருந்த சைதை துரைசாமியிடம், 116வது வார்டு கவுன்சிலர் பி.சீனிவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில், விஜிலன்ஸ் விசாரணைக்கு உத்தரவிடபபட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், தான் 2016ம் ஆண்டு அக்டோபரில் என பணிக்காலம் முடியும் வரை எனக்கு அதுகுறித்த தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்று சைதை துரைசாமி மறுத்துள்ளார்.

இந்த விவகாரம்  தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.