சென்னை:  தமிழ்நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தனித்து நின்றாலும் 234 தொகுதிகளிலும் எங்களால் வெற்றி பெற முடியும் என அடித்து சொல்கிறார் தவெக  பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்  ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தவெகவில்  சேரும் கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த மரியாதை மற்றும் ஏற்ற தொகுதிகள் வழங்கப்படும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

சென்னை போயஸ் கார்டனில் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து  கூறியதாவது,

தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்கிறதா என்ற கேள்விக்கு,   “திமுக முதலில் காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தட்டும். திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, காங்கிரஸின் கிரிஷ் சோடங்கர் அறிவாலயத்திற்கு வெளியே மாதக்கணக்கில் காத்துக்கிடக்கிறார். எங்கே பேச்சுவார்த்தை நடத்தினால், அவர்கள் தவெகவிற்கு வந்துவிடுவார்களோ என திமுக பயப்படுவதாலேயே இன்னும் பேச்சுவார்த்தையை தொடங்காமல் உள்ளது.

முதலில் கூட்டணியில் இருப்பவர்களுடன் திமுக பேசட்டும். அதன்பிறகு நாங்கள் (தவெக) பேசுகிறோம்.

கூட்டணியே இல்லை என்றாலும் கூட, 234 தொகுதிகளிலும் தவெகவால் தனித்து நின்றே வெல்ல முடியும். என்றவர்,  அதேசமயம், நட்பு சக்திகள் வர விரும்பினால், கூட்டணிக்கு வரவேற்போம் என்றார்.

காங்கிரஸ் கட்சி தவெக கூட்டணிக்கு வரும்  என நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு,   தற்போது திமுக – காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது என்றவர்,  தவெக – காங்கிரஸ் இருகட்சியின் கொள்கைகளில் ஒற்றுமை உள்ளது என்றவர், தவெக கூட்டணியில் சேரும் கூட்டணி கட்சிகளுக்கு தகுந்த மரியாதையும், அவர்களுக்கு ஏற்ற தொகுதிகளும் வழங்கப்படும் என்றவர்,  இருந்தாலும், காங்கிரஸ் இணையுமா என்பது பற்றி கருத்து தெரிவிப்பது ஏற்புடையது அல்ல,” என  தெரிவித்தார்.

திமுகவின் கடந்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சில தகவல்கள் குறித்த கேள்விக்கு பதில் கூறியவர்,  “திமுக தனது தேர்தல் அறிக்கையில் வேலைவாய்ப்பு குறித்து தெரிவித்திருந்தாலும், அதற்கான முன்னேற்றம் நடைமுறையில் இல்லை என்று மறுத்தார்.  ஆண்டுக்கு சுமார் 5.5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது,   அதை வைத்து பார்த்தால், பல லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் அவ்வாறு ஏதும் இல்லை என்றவர்,  அரசு வேலைவாய்ப்பு தேர்வுகள் முறையாக நடைபெறவில்லை என்றார்.

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் போதை பழக்கம் குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியதுடன்,  போதைப் பொருள் விற்பனையை கட்டுப்படுத்த, காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும்என்றார்.

கஞ்சா விற்பனை மற்றும் போதைப்பொருள் தொடர்பான பணம் ,அரசியல் நிதியாக பயன்படுத்தப்படுகிறதா? என்ற கேள்விகக, இது குறித்து மத்திய அரசின்   அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகிறதே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, இந்த விசயத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும், ஆனால், அவ்வாறு இல்லை என்றவர்,  கனிம வளங்கள் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தவெக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு,  தமிழ்நாட்டில் தற்போதுள்ள முக்கிய பிரச்சனைகளை முன்வைத்து தவெக தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு வருகிறது. அதில், பெண்கள் பாதுகாப்பு, புதிய வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்” என   உறுதி தெரிவித்தார்.

பாஜகவை தவெக விமர்சிப்பதில்லையே என்ற கேள்விக்கு,  , “பராசக்தி படம் வெளியாகி ‘ஜனநாயகன்’ வெளிவராமல் இருப்பதில் இருந்தே தெரியவில்லையா? யார் யாருடன் ஒன்றாக இருக்கிறார்கள்.

இவ்வாறு ஆதவ் அர்ஜுனா கூறினார்.

[youtube-feed feed=1]