சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில்  நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்கள் விசிலடிக்க காவல்துறை  தடை விதித்தது பேசும்பொருளாகி உள்ள நிலையில், சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும் தவெக பேச்சாளர் நாஞ்சில் சம்பளம் விமர்சித்து உள்ளார்.

சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! விசிலின் ஓசையில் தளபதி விஜய்யின் ஆட்சி நடக்கும்..!” என கூறியுள்ளார்.

சென்னை கிரிககெட் ரசிகர்களிடையே விசில் போடு என்பது ரத்தத்தில் ஊறியது. சிஎஸ்கே போட்டியின் வாசகமாகவே விசில் இடத்திருக்கும். கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், சிஎஸ்கே கேப்டனுமான தோனியும், விசில் போடு என விசிலடித்து விளம்பரம்படுத்தி வருகிறார். சென்னையில் கிரிக்கெட் கலாச்சாரத்தோடு ஒன்றிப்போன விசிலுக்குத் தடை விதிக்கப்பட்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 8ந்தேதி) சென்னையில் நடைபெற்ற கிரிககெட் போட்டியில்  விசில் தடை  போடப்பட்டது விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA)  விசில்  தடை மைதான நிர்வாகத்தால் விதிக்கப்படவில்லை என்றும், இது முழுக்க முழுக்க காவல்துறையின் முடிவு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த  டி20 உலகக்கோப்பை போட்டிகள்  பிப்ரவரி 7ந்தேதி  சனிக்கிழமை தொடங்கிய நிலையில், நேற்று (8ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடைபெற்றது. நேற்றைய போட்டி  ஆப்கானிஸ்தான் – நியூசிலாந்து இடையே நடைபெற்றது. இந்த போட்டியின்போது ரசிகர்கள் விசில் கொண்டு வர சென்னை காவல்துறை தடைவிதித்தது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.  மைதானத்தில் விசில்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.

தேர்தல் ஆணையம் சமீபத்தில்  நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு,  ‘விசில்’ சின்னத்தை ஒதுக்கி உள்ளது. முதல்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் விஜய்யின் கட்சிக்கு இந்தச் சின்னம் கிடைத்துள்ள நிலையில், இந்தத் தடை முக்கியத்துவம் பெறுகிறது.

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் இதுகுறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஐ.பி.எல் போட்டியின்போது இப்படித் தடை விதித்தால், சி.எஸ்.கே மற்றும் தோனி ரசிகர்கள் தி.மு.க அரசுக்கு எதிராகத் திரும்புவார்கள்  கூறப்படுகிறது.

இந்தத் தடை குறித்து த.வெ.க. செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கூறுகையில், “உலகம் முழுவதும் கால்பந்து அல்லது எந்தப் போட்டியாக இருந்தாலும் மக்கள் விசிலைப் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு குற்றச்செயலுக்கான பொருளா? விசிலின் உண்மையான அர்த்தம் தவறான ஆட்டத்தை (Foul game) நிறுத்துவது என்பதாகும். இந்த அரசாங்கமே தவறுகளால் நிறைந்துள்ளது” என்று சாடினார்.

விசில் தடை குறித்துத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) விளக்கமளித்துள்ளது. இந்தத் தடை மைதான நிர்வாகத்தால் விதிக்கப்படவில்லை என்றும், இது முழுக்க முழுக்க காவல்துறையின் முடிவு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அல்லது பி.சி.சி.ஐ. (BCCI) ஆகியவற்றுக்கும் இந்தத் தடைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று மைதான நிர்வாகம் கூறியுள்ளது. வழக்கமாக தண்ணீர் பாட்டில்கள், பவர் பேங்க்கள் மற்றும் குடைகளுக்குப் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தடை விதிக்கப்படும். ஆனால், தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் விசிலைச் சேர்த்திருப்பது விசித்திரமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இதைடுத்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க. பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் “சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் “விசில்” சத்தம் கேட்டால் சித்தரஞ்சன் சாலையில் இருப்பவர்களுக்கு தூக்கம் போய்விடுகிறது..!

சீப்பை மறைத்து வைத்தாலும் கல்யாணம் நடக்கும்..! விசிலின் ஓசையில் தளபதி விஜய்யின் ஆட்சி நடக்கும்..!” என கூறியுள்ளார்.

[youtube-feed feed=1]