டெல்லி:  இவிகேஎஸ் இளங்கோவன் மறைந்ததால் காலியாக உள்ள  ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி,  ஈரோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டெல்லி சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5ந்தேதி நடைபெற்று, பிப்ரவரி 8ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், அதே தேதிகளை ஈரோடு கிழக்கு உள்பட சில மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி, உ.பி. மாநிலம்  மில்கிபுர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,

வேட்புமனு தாக்கல்   ஜனவரி 10ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

வேட்புமனு தாக்கல்   செய்ய  கடைசி நாள் ஜனவரி 17ந்தேதி  (வெள்ளிக்கிழமை).

வேட்புமனு  பரிசீலனை  ஜனவரி 18ந்தேதி  (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

வேட்புமனு வாபஸ் பெற கடைசி நாள் ஜனவரி 20ந்தேதி (திங்கட்கிழமை) என அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் 

வாக்குப்பதிவு நாள்  பிப்ரவரி 5ந்தேதி (புதன்கிழமை) என்றும்,   வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள்   பிப்ரவரி 8ந்தேதி (சனிக்கிழமை) என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிச. 14 ஆம் தேதி காலமானார்.   இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது. இந்த நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார், இன்று  சட்டப்பேரவைத் தேர்தலுடன் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும்  அறிவித்துள்ளார்.

அதன்படி,  வேட்புமனுத் தாக்கல் ஜனவரி 10ஆம் தேதி தொடங்கவுள்ளது. வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் நடைமுறைகள் பிப்ரவரி 10ஆம் தேதி நிறைவடையும்.