திருச்சி

திமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி திமுக கூட்டணி உடைகிறதா என சந்தேகத்தை கிளப்பி உள்ளார்.

.

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்,

 “முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் என்னை பற்றி சில விமர்சனங்கள் செய்துள்ளார். ஆட்சியில் இருக்கும் போது எதுவும் செய்யவில்லை என கூறியுள்ளார். கடந்த 2011 முதல் 2021 வரை மிக சிறந்த ஆட்சியை அ.தி.மு.க தந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் வரை சிறப்பான ஆட்சி தந்தார்கள். அதன் பின் என் தலைமையிலான ஆட்சியிலும் சிறப்பான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் கொண்டு வந்தோம். அ.தி.மு.க ஆட்சியில் சேலத்தில் கட்டி முடிக்கப்பட்ட கால்நடை பூங்கா இன்று வரை திறக்கவில்லை, அதை திறக்க கூட திராணியற்ற முதல்வரே இன்றைய முதல்வர். திராணியற்ற அரசாங்கம் தான் திராவிட மாடல் ஆட்சியாக பார்க்கப்படுகிறது.

ஸ்டாலினுக்கு மக்கள் குறித்து கவலை இல்லை. குடும்ப உறுப்பினர்கள் குறித்து தான் கவலைப்படுகிறார். எனக்கு திறமை இல்லை என முதல்வர் கூறுகிறார். சாதாரண கிளை செயலாளரான எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர் ஆனதற்கு திறமை தான் காரணம். ஆனால், ஸ்டாலின் கருணாநிதியின் அடையாளத்தை வைத்து தான் முதல்-அமைச்சர் ஆனார். கருணாநிதியின் பேரன் என்கிற காரணத்தால் தான் உதயநிதி துணை முதல்-அமைச்சராக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க ஆட்சியை கூட்டணி கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் கூட்டணியில் விரிசல் வந்துவிட்டதாக தான் மக்கள் நினைப்பார்கள். கூட்டணி உடையும் என்கிற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. தி.மு.க கூட்டணி உறுதியாக உள்ளது என மீண்டும் மீண்டும் கூறுவதே அந்த கூட்டணி கட்சிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் தான். அதனால்தான் மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கப்படுமா என்று கேட்கிறீர்கள். ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து தி.மு.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. யார் யார் எங்களுடன் கூட்டணிக்கு வருகின்றார்களோ அவர்கள் எல்லாம் ஒத்த கருத்து உடையவர்கள் தான். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அதற்கு முன்பு எது கூறினாலும் அது நிற்காது”

எனத் தெரிவித்துள்ளார்.