அகமதாபாத்: மூன்றாவது டி-20 போட்டியில், இந்தியாவை, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது இங்கிலாந்து அணி.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 20 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தது. விராத் கோலி அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், ஜோஸ் பட்லர் 52 பந்துகளில் 83 ரன்களை அடித்து, இறுதிவரை அவுட்டாகாமல் இருந்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார். அவருக்கு துணையாக பேர்ஸ்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர், 28 பந்துகளில் 40 ரன்களை அடித்து நாட்அவுட்டாக இருந்தார். ஆனால், இந்திய அணியில், கோலிக்கு துணையாக யாருமே ஆடவில்லை. இதனால், 20 ரன்களையாவது கூடுதலாக பெறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

5 போட்டிகள் கொண்ட இத்தொடரில், இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்திய பந்துவீச்சாளர்கள், இத்தொடரில் தொடர்ந்து திணறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.