டில்லி

ந்த வருடம் ஏப்ரல் மாதம் இறுதியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வர உள்ளார்.

இந்த வருடக் குடியரசு தின விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள இருந்தார்.   ஆனால் இங்கிலாந்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமானதன் காரணமாக அவருடைய பயணம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் அவர் ஏப்ரல் இறுதியில் இந்தியா வர உள்ளார்.  போரிஸ் ஜான்சன் இங்கிலாந்து பிரதமரான பிறகு இந்தியாவுக்கு வரும் முதல் பயணம் இது என்பதால் இந்த பயணம் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பில் அவருடன் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தப் பேச்சு வார்த்தைகள் நடைபெற உள்ளன.   குறிப்பாக வேலை வாய்ப்புகள் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]