லண்டன்
இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வருடம் 1.8% ஊதிய உயர்வு அளிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தற்போது இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது தெரிந்ததே. கிட்டத்தட்ட 100% ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அதே போல கடந்த வருடம் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது தெரிந்ததே.
தற்போது இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வருடா வருடம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் அதிகபட்சமாக இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 1.4% ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இந்த வருடத்துக்கான ஊதிய உயர்வாக 1.8% பாராளுமன்ற கமிட்டி அங்கீகரித்துள்ளது.
ஸ்காட்லாந்து நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 0.6% ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.