அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து, 5 போட்டிகள் கொண்ட தொடரில் முன்னிலை வகிக்கிறது.
முதலில் களமிறங்கிய இந்திய அணி, இங்கிலாந்து பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், வெறும் 124 ரன்களையே 20 ஓவர்களில் சேர்த்தது.
பின்னர், எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து, இந்திய பந்துவீச்சு குறித்த சிறிதளவு பயம்கூட இல்லாமல் ஆடத் தொடங்கியது.
அந்த அணியின் துவக்க வீரர்களே வெற்றியை உறுதிசெய்தனர். அதன்பிறகு, 3வது மற்றும் 4வது வீரர்களாக களமிறங்கிய டேவிட் மாலன் 24 ரன்களையும், பேர்ஸ்டோ 26 ரன்களை அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.
124 ரன்களை அடித்து ரன்கள் சமமாக இருந்த நிலையில், பேர்ஸ்டோ ஒரு சிக்ஸர் அடித்து, இங்கிலாந்தின் எண்ணிக்கையை 130 என்றாக்கினார். ஆட்டத்தை 15.3 ஓவர்களிலேயே முடித்து, 8 விக்கெட்டுகளில் வென்றது இங்கிலாந்து.