சென்னை: தமிழ் உள்பட13 மொழிகளில் பொறியியல் பாடத் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளதாக  ஏஐசிடிஇ தலைவர் சீத்தாராம்  தெரிவித்து உள்ளார்.

தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் 47 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு தலைவர் சீத்தாராம், நமது நாட்டில், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் மராட்டியம் உள்ளிட்ட 13 மொழிகளில் பொறியியல் மற்றும் டிப்ளமோ பாடத்திட்டங்கள் உருவாகப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் 47 -வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், பங்கேற்ற அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு தலைவர் சீத்தாராம் பேசுகையில், அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழு கட்டுப்பாட்டில் 3,600-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரியில் செயல்பட்டு வருகின்றன. இதில், 13 லட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. இந்த கல்லூரிகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் அதிகமான பொறியாளர்கள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். அத்துடன் 3,400 டிப்ளமோ கல்லூரிகள் வாயிலாக 10 லட்சம் பட்டயதாரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.

உலகம் முழுக்க அதிக அளவில் பட்டதாரிகளை உருவாக்கிய நாடாகவும், பல்வேறு உலக நாடுகளுக்கு இஞ்ஜினியர்களை அனுப்பிவைக்கும் நாடாகவும் இந்தியா திகழ்ந்து வருகிறது. இதில், 40 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொறியியல் கல்வி நிறுவனங்களில் 110 மொபைல் செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனையாகும். மேலும், இந்த ஆண்டு மேலும் 100 மொபைல் செயலிகள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஐரோப்பா போன்ற நாடுகளில் பொறியியல் படிப்புகள் அவர்களது தாய் மொழியில் வழங்குகின்றனர். நாமும் நமது நாட்டில், தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் மராட்டியம் உள்ளிட்ட 13 மொழிகளில் பொறியியல் மற்றும் டிப்ளமோ பாடத்திட்டங்கள் உருவாகப்பட்டுள்ளன. அவைகள் அனைத்தும் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நிபுணர்களைக் கலந்த ஆலோசித்து இந்த பாடத்திட்டங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த  பாடத்திட்டங்களை 17 நாடுகளிலிருந்து 5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இவ்வாறு கூறினார்.