அண்ணாத்த படத்துடன் நேற்று முன்தினம் வெளியான ஒரே முன்னணி நடிகரின் படம் எனிமி.
ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கும் எனிமிக்கு பரவலாக நல்ல விமர்சனங்களே கிடைத்தன.
நவம்பர் 4 ஆம் தேதி எனிமி தமிழகத்தில் 3.4 கோடி நெட் வசூலை பெற்றுள்ளது (டிக்கெட் கட்டணம் 100 எனில் அதில் வரி 28 ரூபாய் இருக்கும். நெட் வசூல் என்றால், வரி போக கிடைத்த VNல் என்று பொருள். 100 ரூபாயில் ஒரு டிக்கெட் விற்றால் நெட் வசூல், 72 ரூபாய்) இரண்டாவது நாள் தமிழக அளவில் நெட் வசூல் 3.08 கோடிகள். முதலிரு தினங்களில் எனிமியின் தமிழக வசூல் 6.48 கோடிகள்.
தெலுங்கு மாநிலங்களில் எனிமி முதல்நாளில் 1.2 கோடியும், இரண்டாவது நாளில் 0.58 கோடியும் வசூலித்துள்ளது. முதலிரு தினங்களில் ஆந்திரா, தெலுங்கானாவில் எனிமியின் நெட் வசூல் 1.78 கோடிகள்.