திருவனந்தபுரம்

ர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளதால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு மும்பையில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் 657 இல் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்துள்ளது,  இதனால் ஏர் இந்தியா விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை நெருங்கியதும் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் தெரிவிக்கப்பட்டதால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த வெடிகுண்டு மிரட்டலையொட்டி திருவனந்தபுரம் விமான நிலையத்தில் முழு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.  ஏர் இந்தியாவின் மும்பை – திருவனந்தபுரம் விமானம் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த விமானம் மற்றும் விமான நிலையம் முழுவதையும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.  இந்த அச்சுறுத்தல் குறித்த விசாரணையும் தீவிரமாக நடந்து வருகிறது.

[youtube-feed feed=1]