நாடாளுமன்ற தேர்தல்அறிவிப்புகள் வெளியாகி தேர்தல் பணிகள் சுறுசுறுப்படைந்து உள்ளன. அதே நேரத்தில், வாக்குகளை கைப்பற்றுவது எப்படி என்று கட்சிகளும் பல்வேறு வகையான ஆலோசனைகள் நடத்தி வருகின்றன.
ஏற்கனவே பல தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெற்று, வெற்றிகள் வசமாக்கப்பட்டு வரும் நிலையில், முறைகேடுகளை தடுக்கவும், அதுகுறித்து புகார் தெரிவிக்கும் வகையில், பல்வேறு மொபைல் செயலிகள், டோல் ஃபிரி எண்களை அறிவித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது தேர்தல் ஆணையம்…. அதுகுறித்து ஒரு பார்வை…
சி-விஜில் (C-Vigil) மொபைல் செயலி
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், அதை மீறி அரசியல் கட்சிகள் செய்பட்டாலோ, முறைகேடுகளை நடைபெற்றாலோ, அது தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவிக்கும் வகையில் C-Vigil என்ற ஆண்டிராயிட் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயலி மூலம் புகார்களை தெரிவித்து, முறைகேடுகளை நடைபெறுவதை தவிர்க்கலாம்.
Voter helpline mobile செயலி
Voter helpline mobile ஆப் எனப்படும் செயலியின் மூலம் வாக்காளர்கள் பெயர் சரி பார்த்தல், புதிய வாக்காளர் சேர்க்கை, லஞ்ச ஒழிப்பு, தேர்தல் ஆணையத்தின் முக்கிய அறிவிப்புகள் ஆகியவற்றை எளிதில் அறிய முடிகிறது.
சுவிதா (Suvidha) செயலி
சுவிதா (Suvidha) செயலி மூலம் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்கள் அங்கீகரிக்கப்பட்டனவா என அறிய முடியும்.
சமாதன் செயலி
வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான பரிந்துரைகள், புகார்கள் அளிக்க சமாதன் என்ற செயலியை பயன்படுத்தலாம் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த செயலியின் மூலம் புகார்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லமுடியும்.
இலவச தொலைபேசி அழைப்பு எண் 1950
வாக்காளர்கள் இலவச அழைப்பு எண்ணான 1950 என்ற எண்ணை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
Election monitoring dasboard இணையம்
தேர்தல் நடைபெறும் போது வாக்குச்சாவடிகளின் நிலவரங்கள் உடனுக்குடன் தேர்தல் ஆணையத்திற்கு http://electionmonitoring.nic.in/ (Election monitoring dasboard என்ற இணையம் வழியாக பதிவிடப்படுகின்றன.
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் பல மாநிலங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சுழற்சி முறையை கணினி சார்ந்த நெறிமுறையை கொண்டு தேர்தல் ஆணையம் எளிதாக செய்கிறது.
சுகம் (Sugam) இணையதளம்
தேர்தலின் போது பயன்படுத்தப்படும் வாகனங்களின் தரவுகளை நிர்வகிக்க சுகம் Sugam என்ற இணையதளத்தை ஆணையம் பயன்படுத்துகிறது.
சுவிதா (Suvidha) இணையதளம்
அரசியல் கட்சிகள் பரப்புரை செய்வதற்கான அனுமதியை சுவிதா என்ற இணையதளம் வாயிலாகவும் பெறலாம்.
பொதுமக்கள் அரசியல் கட்சியினர் தேர்தல் ஆணையம் அமைத்துள்ள செயலிகள் மற்றும் இணை தளத்தை பயன்படுத்தி தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.