ரவுண்ட்ஸ்பாய்:

தலைப்பைப் பார்த்தவுடனே மிரண்டுடாதீங்க.  500 டாஸ்மாக் கடைகள் மூடல் உட்பட, எடப்பாடியோட முதல் ஐந்து உத்தரவுகளே விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கு.

அதாவது ஐநூறு டாஸ்மாக் கடைகள் மூடப்படும்னு எடப்பாடி உத்தரவு போட்டார் இல்லையா. இதை ஏற்கெனவே நீதிமன்றம் சொல்லியிருக்கேனு தலைமைச் செயலகத்துல கிண்டலா பேசறாங்க. அதாவது, தமிழ்நாட்டுல தோராயமா 6600 டாஸ்மாக் கடைங்க இருக்குது.  அதுல, தேசிய, மாநில நெடுஞ்சாலையில இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள்ள இருக்குற 2700 டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டுருக்கு. ஆனா, முதல்வரோ,  இந்த தீர்ப்பு குறித்து எதுவும் பேசாம, 500 கடைங்களை மூடுவோம்னு மட்டும் சொல்லியிருக்காரு. இதைத்தான் கோட்டையில முணுமுணுக்கிறாங்க.

அதோட, “பன்னீரைவிட, பழனிச்சாமி துணிச்சலான ஆளா இருக்காரு”ன்னும் பேசிக்கிறாங்க.

ஏன்னு கேட்டதுக்கு, அவங்க சொன்னது இதுாதான்:

“கேஸ்ல சிக்கி ரெண்டு முறை ஜெயலலிதா பதவி இழந்தப்ப, ஓ.பி.எஸ்தான் முதல்வரானாரு. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் முதல்வர் ஆனாரு. இந்த மூணு முறையும் அவரு ஜெயலலிதாவோட (முதல்வர்) அறையை பயன்படுத்தவே இல்லை. தன்னோட (அமைச்சர்) அறையில இருந்தே முதல்வர் வேலையையும் பார்த்தாரு. ஜெயலலிதா மேல அம்புட்டு மரியாதையாம் அவருக்கு.

ஆனா எடப்பாடி வேற டைப்பா இருக்காரு. சட்டசபையில பெரும் சர்ச்சைகளுக்கு இடையே பெரும்பான்மையை நிரூபிச்ச அவரு, இன்னிக்கு காலைல, 12.30 மணிக்கு தலைமை செயலகம் வந்தாரு.

ஏற்கனவே அமைச்சர் அப்படிங்கிற முறையில  அவருக்கு ஒரு அறை உண்டு. ஆனா, அவரு நேரா ஜெயலலிதா பயன்படுத்திய அறைக்கு போனாரு. ஜெயலலிதா பயன்படுத்திய நாற்காலியில உட்காந்தாரு.  முதல்வராக பொறுப்பு ஏத்துக்கிட்டாரு.

இதிலேருந்தே தெரியலையா, பன்னீரைவிட எடப்பாடி துணிச்சலானவருன்னு!” அப்படின்னு சொன்னாங்க.

எனக்கு ஒன்னும் சொல்லத்தோணலை!