சீனாவின் மியுசிக்கல் செயலியானது, ஏதாவது பாட்டுக்கு தாமே பாடுவது , தாமே நடனமாடுவது , சினிமா வசனங்களை பேசுவது போன்ற பல்லூடக செயலியாகவும், சிறந்த பொழுதுபோக்கு செயலியாக விளங்கியது.
இதில் சிறப்பாக பாடியவர்கள் தங்களை மேலும் மெருகேற்றிக்கொண்டார்கள், புதியதாக பாட ஆரம்பித்தவர்கள் குறைந்தபட்சம் ராகங்களையாவது தெரிந்துகொண்டார்கள். ஆனால் நாளடைவில், இந்த செயலிகள் மூலம் ஆபாச அங்க அசைவுகளுடனும், அநாகரிகமாகவும் சிலர் வீடியோ வெளியிடுவதாக புகார் எழுந்தது. இதனால் இதை தடை செய்ய வேண்டும் என சில ஆண்டுகளாக கோரிக்கைகள் வலுத்து வந்தன.
இந்த செயலியை சீனாவின் முன்னணி நிறுவனமான பைட்டான்ஸ் (Bytedance) நிர்வகித்து வருகிறது. இ இந்த செயலி மூலம் பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, இந்தியா, டிக்டாக் செயலி உள்பட ஏராளமான சீன செயலிகளுக்கு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், டிக்டாக்கில் “அநாகரீகமான வீடியோக்களை” வெளியிட்டதற்காக எகிப்து நீதிமன்றம் அந்நாட்டைச் சேர்ந்த 5 பெண்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது
எகிப்திய குடும்பங்களின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளை மீறியதற்காக அப்பெண்களுக்கு தலா 300,000 எகிப்திய பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது.
ஏற்கனவே கடந்த மாதம், எகிப்து நாட்டைச் சேர்ந்த பெல்லி நடன கலைஞர் சமா எல் மஸ்ரி, ஓழுக்கக்கேட்டிற்குத் தூண்டுதல் என்ற வழக்கில் மூன்று வருடங்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு 20,000 டாலர் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.