அனில் அம்பானி குழும நிறுவனங்கள் மற்றும் யெஸ் வங்கிக்கு எதிரான ரூ.3 கோடி வங்கிக் கடன் மோசடி தொடர்பான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அமலாக்க இயக்குநரகம் (ED) வியாழக்கிழமை பல இடங்களில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

மும்பை மற்றும் டெல்லியில் உள்ள 50 நிறுவனங்களின் 35க்கும் மேற்பட்ட இடங்களிலும், சுமார் 25 தனிநபர்களுக்குச் சொந்தமான இடத்திலும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

2017 மற்றும் 2019 க்கு இடையில் யெஸ் வங்கியில் இருந்து சுமார் ₹3,000 கோடி சட்டவிரோத கடன் பரிமாற்றங்கள் செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருவதாக ED வட்டாரங்கள் தெரிவித்தன.

கடனுக்கான அனுமதி வழங்குவதற்கு முன்பே யெஸ் வங்கியிடம் இருந்து பணத்தைப் பெற்றதாக அமலாக்கத் துறை கண்டறிந்துள்ளது.

அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் ரிலையன்ஸ் நிறுவனம் விதிகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் கடன் மோசடியில் ஈடுபட்டதாக எஸ்பிஐ தகவல்… அனில் அம்பானி குறித்து ஆர்.பி.ஐ.யிடம் புகாரளிக்க முடிவு…