டில்லி:

க்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சர்ச்சை சாமியாரிணி பிரக்யா சிங் தாகூர் 3 நாட்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட தேர்தல் ஆணை தடை விதித்து உள்ளது.

சர்ச்சைகளை உருவாக்குவதில் வல்லவரான இளம்சாமியார் சாத்வி பிரக்யா சிங் சமீபத்தில், ஹேமர்ந்த கார்கரே மரணம் குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வந்தனர், பின்னர் அதற்காக மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில், பாபர் மசூதியின் உச்சியில் ஏறி, அதை இடிப்பதற்கு உதவி செய்தேன் என்றும், அந்த வாய்ப்பையும், அதற்கான சக்தியையும் அருளியதற்காக கடவுளுக்கு நன்றி. நான் அதை செய்துவிட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

பா.ஜ.க.வின் போபால் மக்களவை தொகுதி வேட்பாளர் பிரக்யா சிங் தாகூர் அங்கு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில், பாபர் மசூதி இடிப்பு குறித்து பேசியது தேர்தல் விதி மீறல் என குற்றம் சாட்டப்பட்டது.

பிரக்யா சிங்கின்  பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், தேர்தல் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பிரக்யா சிங், இன்று காலை 6 மணியில் இருந்து 3 நாட்கள் (72 மணி நேரம்)  தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.