டில்லி

ன்று ”மோடி – ஒரு சாதாரண மனிதனின் பயணம்” என்னும் இணைய தொடரை தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் மோடியின் வாழ்க்கைக் கதையைக் கொண்டு தயாரிக்கப்பட்ட “பி எம் நரேந்திர மோடி” என்னும் படம் வெளியாக இருந்தது. இது தேர்தல் விதிகளை மீறுவதாக புகார்கள் எழுந்தது. கடந்த 10 ஆம் தேதி இந்த படத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

அந்த தடை உத்தரவில், “எந்த ஒரு பயோபிக் எனப்படும் வாழ்க்கை கதை படம் அல்லது தொடர் அரசியல் வாதிகளின் வாழ்க்கை கதையின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தால் அதை வெளியிடுவது தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவதாகும். அதனால் அது போன்ற எதையும் அனுமதிக்கப்பட மாட்டாது” என குறிப்பிடப்பட்டிருந்தது.

வெப் சீரிஸ் என அழைக்கப்படும் இணைய தள தொடர் ஒன்று மோடியின் வாழ்க்கை குறித்து ஒளிபரப்ப படுகிறது. இந்த தொடருக்கு “மோடி – ஒரு சாதாரண மனிதனின் பயணம்” (MOFI – JOURNEY OF A COMMON MAN) என ஆங்கிலத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த தொடருக்கு இன்று முதல் தேர்தல் ஆனையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏற்கனவே வெளியாகி உள்ள இந்த தொடரின் பாகங்களும் இணையத்தில் இருந்து நீக்கப்பட வேண்டும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.