கவுகாத்தி:

அஸ்ஸாம் மாநிலம் கோக்ராஜர் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவானது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு, சேதம் குறித்து எவ்வித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.