நெதர்லாந்து பிரதமராக ராப் ஜெட்டன் (38) நேற்று பதவியேற்றார்.
Democrats 66 (D66) கட்சியின் சார்பாக போட்டியிட்ட ராப் ஜெட்டன் தன்னை ஓரினச்சேர்க்கையாளர் என்று வெளிப்படையாக அறிவித்துக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலில் வலதுசாரி இயக்கமான கீர்ட் வில்டர்ஸ் தலைமையிலான Party for Freedom கட்சியை தோற்கடித்து அந்நாட்டின் அறியப்பட்ட முதல் ஓரினச்சேர்க்கையாளர் பிரதமராக அவர் வரலாறு படைத்தார்.
நெதர்லாந்தின் LGBTQ உரிமைகள் அமைப்பான COC Nederland, “ஜெட்டன் பிரதமராக உயர்ந்தது, ஒருவரின் பாலியன விருப்பம் அவர்களின் சாதனைக்கு தடையாக இருக்க வேண்டியதில்லை என்பதை காட்டுகிறது,” என்று கூறியுள்ளது.
ஜெட்டன், அர்ஜென்டினா ஹாக்கி வீரரான நிக்கோலஸ் கீனன் உடன் 2022ம் ஆண்டு முதல் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.

மிக இளம் வயதில் நெதர்லாந்தின் பிரதமராக பதவியேற்று வரலாறு படைத்துள்ள ஜெட்டன் போலவே அந்நாட்டின் முதல் “First Gentleman” ஆக அவரது வாழ்க்கைத் துணைவர் நிக்கோலஸ் கீனன் இருப்பார்.
ஏற்கனவே, நெதர்லாந்து மன்னர் வில்லெம்-அலெக்சாண்டரை மணந்துள்ள மகாராணி மாக்ஸிமா சோரெகுயேட்டா அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர் என்பதால் நெதர்லாந்து – அர்ஜென்டினா இடையிலான உறவு அந்நாட்டு மக்களுக்கு புதிதல்ல என்று கூறப்படுகிறது.
[youtube-feed feed=1]