தென்னிந்திய திரைப்பட முகங்களாக உருவாகி உள்ள மலையாள ஹீரோக்கள் பகத் பாசில், பிரித்திவிராஜ், துல்கர் சல்மான் ஆகியோர் அவர்களது மனைவிகளோடு வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது .
துல்கர் சல்மான் தற்போது மலையாளத்தில் குருப், சல்யூட் என்ற படங்களிலும், தமிழில் ஹே சினாமிகா என்ற படத்திலும், தெலுங்கில் யுத்தம் தோ ரசின பிரேம கதா என நான்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
மலையன்குஞ்சு என்ற மலையாள படத்தில் நடித்து வரும் ஃபகத் பாசில், தெலுங்கில் புஷ்பா படத்திலும், தமிழில் விக்ரம் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் வெற்றி பெற்ற பிரித்விராஜ் தற்போது 2 படங்களின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்