கொச்சி
பிரபல நடிகர் மோக்ன்லால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனூமதிக்கப்பட்டுள்ளார்.
மோகன்லால் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் ஆவார் தற்போது இவர் எல் 2 என்னும் பெயரில் தயாராகும் லூசிபர் படத்தின் 2 ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். லூசிபர் 2 படத்தின் படப்பிடிப்ப் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது. இதை முடித்துக் கொண்ட மோகன்லால் கொச்சிக்கு திரும்பி உள்ளார்
கொச்சி வந்த மோகன்லாலுக்கு தீவிர காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் தசைவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. அவருக்கு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர் ஐந்து நாட்களுக்கு முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மருத்துவமாஇயில் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, மோகன்லாலுக்கு வைரஸ் சுவாச தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.