யோத்தி

நேற்று புத்தாண்டை முன்னிட்டு அயொத்தி ராமர் கோவிலுக்கு 2 லட்சம் பேர் வந்துள்ளனர்.

 

நேற்றைய புது வருட பிறப்பை முன்னிட்டு நாடு முழுவதிலும் உள்ள மக்கள் கோவில்களுக்கும், கிறிஸ்தவ ஆலயங்களுக்கும் மற்றும் மசூதிகளுக்கும் திரண்டு வந்து பிரார்த்தனை செய்தனர். அவ்வரிசையில் உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவிலுக்கு முதல் நாளான இன்று பக்தர்களின் வருகை அதிகரித்து இருந்தது.

ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை வெளியிட்டு உள்ள செய்தியில்,

“பக்தர்கள் நேற்று காலை 7 மணி முதல் தொடர்ச்சியாக வருகை தந்து கடவுள் ஸ்ரீராமரை தெய்வீக தரிசனம் செய்தனர். 5 வரிசைகளில் தடையின்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று ஒரே நாளில் 2 லட்சத்துக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என மதிப்பிடப்பட்டு உள்ளது. ராமர் கோவிலுக்கு வருவதற்கு இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டது”

என அறிவிக்கப்பட்டுள்ளது.